வழியும்போது...
வசியம் செய்தது!
வளைந்துக் கொடுத்தால்..
விரட்டி விட்டது!
சுவைக்க நினைத்தேன்...
ஆவல் அழைத்தது!
தேடி அலைந்தேன்...
உள்ளம் சிதைந்தது!
வாட்டி வதைக்கையில்...
நெஞ்சம் கடுத்தது!
நானாய் எடுத்த கணம்..இனித்தது...!
ஆனாலும் நிலைக்கவில்லை...!
வலி தந்த வழி..
எனக்கு வரைபடம் வரைந்தது!
வரம்பு மீற கூடாதென
வரையறையும் போட்டது!
வேண்டாமென மனதில் தோன்றும் எண்ணங்கள்..
ஏனோ தொண்டை குழாயை எட்டிப் பார்த்து
இதழ் வழியே உதிரும்போது
வேண்டும் வேண்டும் என்கின்றன?
நானாய் அழிக்கவில்லை...
தானாய் அழிகின்றன..
எனக்கான எல்லைக் கோடுகள்!
அரை குறையாய் வந்து போகும் ஏக்கம்!
அவ்வப்போது எட்டிப் பார்க்கும் தூக்கம்!
எதையுமே சாதிக்கா உணர்வலைகள்...
மௌனத்தையாவது சாதிக்கட்டும்!
சுவையறிந்த நா
செத்துத் தொலையட்டும்!
எனை சோதித்த சுவையை...
மறந்து போகட்டும்!
இனிவரும் காலங்கள்
இனிக்காமல் போனாலும்
தெவிட்டாமல் போகட்டும்
நிச்சயமாய் இனிப்பான காலங்கள் வரும் கவலைகள மற..
ReplyDelete// நானாய் அழிக்கவில்லை...
தானாய் அழிகின்றன..
எனக்கான எல்லைக் கோடுகள்! //
காலங்கள் மாறும் போது காட்சிகளும் மாறும் என்று நம்பிக்கை கொள்.