Friday, February 5, 2010

அன்பிற்கினிய முகநூலுக்கு...


முக நூலில் எழுதலாமென்று ...
முக நூலுக்காய் எழுதுகிறேன்...!

முகம்தெரியா எங்களை எங்கணம்
முகவரியிட்டுப் பிடித்தாய் நீதான்?!

அன்பாலே அணைக்கும் ஓர் அன்பரை
அசையாமல் எனக்குள்ளே இருத்திவிட்டாய்!
(Thaya)

அழுதால் துடைக்கும் ஓர் அண்ணனை..
அவசியமாய் செயல்பட ஆணையிட்டாய்!
(Gobi Na)

தவறிழைக்கும் தடயம் தென்பட்டால்
தண்டிக்க தமக்கையையும் தரிசித்தாய்!
(Manchu Akka)

கலைக்குச் சிகரமான ஓவியரை
சிலையாய் மனதிற்குள் புகுத்திட்டாய்!
(Pr Rajan)

காலத்தோடு பதிவு பல போட்டிடினும்
காலம் தாழ்த்தாது கருத்து கேட்க
கணக்கில்லா கேள்விகளுடன்
கண்ணுக்குமுன் நிற்கும் நண்பரையும்..
(Prashanthan Thurairaja)

நயமாக நகைப்பூட்டி சிரிக்கையிலே சிந்தனையூட்டி
கலையான காவியத்தை ஒவியாமாக்கிவிட்டு
குறும்போடு பேசிடும் குழந்தையையும்
(Senthu)

வேடிக்கை செய்வதையே வாடிக்கையாய்க் கொண்டு
வற்றாத தமிழோடு வசீகர வார்த்தையோடு
வளம் பெரும் வாலிபன் ஒருவனையும்-அவனோடு
வம்புக்கும் வழக்கிற்கும் வாய்ச்சண்டைக்கும்
வரிசையாய் வலைவீசும் வஞ்சி ஒருத்தியையும்
வளைத்துக் காட்டிட்டாய் நீ எனக்கு!!
(Vimalathithan & Nila)

கவலையாய் கரைந்தோடிய நதியானவளை
கல கலவெனச் சிரிக்கும் கடலாய்ப் பெருக்கி
கருத்துகளை அவளிடத்தில் கசியவிட்டு
கனிவானத் தங்கையாக காட்டிவிட்டாய்!!
(Mayoo Mano)

நட்பாய் நான்கு வார்த்தை பேசவும்
நறுக்கென நானூறு முறைத் திட்டவும்..
நலமான உறவை நாடவும்..
நங்கூரமாய் மனதிற்குள்
நயமாய் பதிந்துவிட்ட நண்பனின்
நட்புக்கு வழி தந்ததும் நீதான்!!
(Prashanthan Vilvarajah)

அளவில்லாமல் சிரித்ததுண்டு
அசிங்கமாக அழுததுண்டு
ஆனால்.. மகிழ்ந்து மகிழ்ந்தே
அசந்துப்போன கதை அறிவீரா?
அப்படி ஒரு மகிழ்வு மனதில்!
அப்படி ஒரு நெகிழ்வு நெஞ்சில்!

முகநூலே...

அனைத்தையுமே அளித்திட்டாய் நீ எமக்கு!
அவற்றை அழியாமல் பார்ப்பதே எம் கணக்கு!

8 comments:

  1. திரும்பவும் சொல்கிறேன் தமிழ் சூப்பரப்பா..:)) என்னைக்குழந்தையாக்கிடீங்களே...அதுவும் சூப்பர்.

    ReplyDelete
  2. உறவிழந்து நடுதெருவில் வந்த போது
    இணைப்பு தந்து எனக்கொரு இடம் தந்து
    தொலைந்ததாய் இருந்த பலதை
    தொடர்பில் தந்த நீ
    அழகான ஒரு உறவுகள் என்று
    மேலதீக இணைப்பும் தந்தாய்
    நிச்சயமாய் நீ எமக்கு
    அனைத்தையுமே அளித்திட்டாய்
    அவற்றை அழியாமல் பார்ப்பதே எம் கணக்கு.

    தமிழ் கவலைய விடுங்க நிச்சயமாய் இந்த கூட்டணி கோட்டைய பிடிக்கும் நம்பிக்கையோடு இருங்க

    ReplyDelete
  3. முகநூலுக்கு இப்படி ஒரு கவிதையா. அருமை. வாழ்த்துகள். நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  4. super tamil unge tamil...!nice..

    ReplyDelete
  5. அருமையான கவிதை......
    முகநூளில் கிடைகெப்பெரும் உறவுகளின் மகிமையை
    அழகாய், அற்புதமான வரிகளுடன் உங்கள் கவிதை இன்னும் அழகு படுத்தியுள்ளது...
    நட்பின் மேன்மையை.......

    என்னையும் உங்கள் நட்பு பூங்காவில் சேர்த்துக் கொள்விறா........
    madavi balakrishan...... :-)

    ReplyDelete